என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கல்லூரி மாணவி கடத்தல்"
- கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
- வாலிபர் மீது புகார் கொடுக்கப்பட்டது.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கெங்குசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் கமலேசன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களது மகள் அருணா (வயது22).
இவர் காரிமங்கலம் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.காம். படித்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார்.
பின்னர் வெகுநேரம் ஆகியும் மாணவி அருணா வீடு திரும்பவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் அவரை தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் பெற்றோர் காரிமங்கலம் போலீசில் எனது மகளை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் கொட்டாவூரைச் சேர்ந்த வேலாயுதம் மகன் பொன்னுவேல் என்பவர் கடத்திச் சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் சரகம் தொண்டராம்பட்டு கிழக்கு கிராமம் புதுத் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது45). விவசாயி இவரது மகள் பிரதிக்ஷா(19). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரதிக்ஷாவை மர்மநபர்கள் சிலர் கடத்தி சென்று விட்டதாக பாலமுருகன் பாப்பாநாடு போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் கடத்தப்பட்ட மாணவி பிரதிக்ஷா குறித்து இன்ஸ் பெக்டர் ஹேமலதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாருடன் சென்று பட்டுக்கோட்டையில் இருந்து பிரதிக்ஷாவை மீட்டு போலீஸ நிலையம் அழைத்து வந்தார். அவரிடம் யார் கடத்தி சென்றனர்?. எதற்காக கடத்தப்பட்டார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள புள்ளிமான் கோம்பை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சுருளிவேல். இவரது மகள் வைத்தீஸ்வரி (வயது 17). திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
அதே கல்லூரியில் மதுரை மாவட்டம் உத்தப்ப நாயக்கனூர் பாறைப் பட்டியைச் சேர்ந்த மதி என்பவரும் படித்து வந்துள்ளார். வைத்தீஸ்வரிக்கு அம்மை நோய் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். செல்போனில் பேசி வந்த மதி யாருக்கும் தெரியாமல் வைத்தீஸ்வரியை கடத்திச் சென்று விட்டார்.
இது குறித்து சுருளிவேல் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கடத்தப்பட்ட மாணவியையும் அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே சங்க கோணான்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவணான்டி. இவரது மகள் கிருத்திகா. இவர் தேனியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிச்சென்றுள்ளார்.
வெகுநேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை சிவணான்டி பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் பெரியபாண்டி மகன் பார்த்திபன் (வயது29), சிவக்குமார் மகன் சத்யா(33), ஈஸ்வரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர்தான் கடத்திச்சென்றிருக்ககூடும் என்று கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் பழனி செட்டிபட்டி போலீசார் இந்த 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தேனி அருகே டொம்புச்சேரி பிள்ளைமார்சாவடியை சேர்ந்தவர் ராசு. இவரது மகள் சுகப்பிரியா(17). ராசு தனது குடும்பத்தினருடம் கோவையில் வசித்து வருகிறார். விசேஷத்திற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
அப்போது சிறுமி தனது பெரியம்மா வீட்டிற்கு சென்றுவருவதாக கூறிச்சென்றுள்ளார். அதிக நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
சிறுமியை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணன் வேல்முருகன் பழனிசெட்டிபட்டி போலீசில் வருசநாடு பவளநகர் பகுதியை சேர்ந்த முத்துராஜ் மகன் சுரேஷ் என்பவர்தான் கடத்திச்சென்றிருக்ககூடும் என்று புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமி மற்றும் அவரை கடத்திச் சென்ற சுரேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
நெகமம்:
ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்தவர் சுகன்யா (வயது 22). அங்குள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ.இறுதி ஆண்டு படித்து வருகிறார். செஞ்சேரிபுத்தூரை சேர்ந்த சதீஷ்குமார் (23). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோபியில் உள்ள தனியார் கம்பனியில் தங்கி வேலைபார்த்து வந்தார்.
அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பணிமாறுதல் ஆகி சதீஷ்குமார் உடுமலைக்கு வந்து விட்டார். அங்கு வந்தபிறகும் இருவருக்கும் காதல் நீடித்து வந்தது. இந்நிலையில் இருவரும் கடந்த 17-ந்தேதி உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்டு இருவரும் செஞ்சேரிப்புத்தூரில் உள்ள சதீஷ்குமார் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுகன்யாவின் அண்ணன் ரகுபதி (27), அவரது தந்தை சென்னிமலை (55) தாயார் விஜயகுமாரி (49) ஆகிய 3 பேரும் சதீஷ்குமார் வீட்டிற்கு சென்று சதீஷ்குமாரை தாக்கிவிட்டு சுகன்யாவை கடத்தி சென்று விட்டனர்.
இதில் சதீஷ்குமார் காயம் அடைந்த நிலையில் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் நெகமம் போலீசார் வழக்கு பதிவு சுகன்யாவை கடத்தி சென்ற ரகுபதி மற்றும் அவரது தந்தை சென்னிமலை, தாயார் விஜயகுமாரி ஆகியோரை தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் வேலன்தொட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் சுபபிரியா (வயது 21). இவர் கும்பகோணம் அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் சுபபிரியா கல்லூரிக்கு சென்றார். அதன்பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் சுபபிரியாவின் தாய் சித்ரா அதிர்ச்சி அடைந்து மகளை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை.
கும்பகோணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கும் சென்று மகளை தேடி பார்த்தனர். அங்கும் அவர் இல்லை.
இதற்கிடையே சுபபிரியாவின் செல்போன் எண்ணில் இருந்து தாய் சித்ராவின் செல்போனுக்கு நேற்று மாலை ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதில், உங்களது மகள் சுபபிரியாவை கடத்தி வைத்துள்ளோம். எங்களுக்கு ரூ.30 லட்சம் கொடுத்து மகளை மீட்டு கொள்ளுங்கள். பணம் கொடுக்கவில்லை என்றால் மாணவியின் உடலை வீட்டுக்கு அனுப்புவோம்’ என்று குறிப்பிட்டு இருந்தது.
இதை படித்து பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்ரா, உடனடியாக பந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவியை கடத்திய கும்பல், பெற்றோருக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மட்டுமே அனுப்பி உள்ளனர். போனில் எதுவும் பேசவில்லை என்பதால் போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி சுபபிரியா காதல் விவகாரத்தில் கடத்தப்பட்டு உள்ளாரா? பணத்தை பறிக்கும் நோக்கில் மர்ம கும்பல் அவரை கடத்தி சென்றுள்ளதா? அல்லது மாணவியே கடத்தல் நாடகம் நடத்துகிறாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தி செல்லப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கயம்:
காங்கயம் அருகே உள்ள ஊதியூர் தாளக்கரையை சேர்ந்தவர் தனசேகரன்(21). பட்டதாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த பி.காம். முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி உள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தனசேகரனுக்கும் அவரது உறவினர் பெண்ணுக்கும் கடந்த 2 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.
ஆனாலும் அவர் கல்லூரி மாணவியை 2-வதாக திருமணம் செய்து கொள்ளும் நிலையில் இருந்தார். சம்பவத்தன்று இரவு வீடு அருகே நின்று கொண்டு இருந்த மாணவியை தனசேகரன் சந்தித்தார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தி உள்ளார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தனசேகரன் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஊட்டிக்கு கடத்தி சென்று உள்ளார்.
மாணவியை காணாததால் அவரது தந்தை ஊதியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மாணவியுடன் தனசேகரன் ஊட்டியில் இருந்து ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
இந்த தகவல் மாணவியின் உறவினர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் பல்லடத்தில் காத்து இருந்தனர். அவர்களை பார்த்ததும் மாணவியை இறக்கி விட்டு விட்டு தனசேகரன் தப்பி சென்று விட்டார்.
அவரை மாணவியின் உறவினர்கள் மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது தொடர்பாக ஊதியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு தாராபுரம் - பொள்ளாச்சி சாலையில் ரவுண்டானா அருகே தனசேகரன் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் தனசேகரனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர் காங்கயம் மாஜிஸ்திரேட்டு சுப்பிரமணியம் முன் ஆஜர்படுத்தப்பட்டார். தனசேகரனை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை:
தி.நகர் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜூ. இவரது மகள் விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 10-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அசோக் நகர் மகளிர் போலிசில் ராஜூ புகார் அளித்தார். மாணவியை வாலிபர் ஒருவர் காஞ்சீபுரம் அருகே கடத்தி சென்றது தெரியவந்தது. உடனடியாக மாணவியை மீட்ட போலீசார் மாணவியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த தி.நகர் கக்கன் காலனியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அசோக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்